முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்து உள்ளார். அதில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக இருந்ததால், நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. விரைவாக மீண்டுவர பிரார்த்தனை தேவை என பதிவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர்களில் உமர், ஜாபர் சர்பராஸுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி ஆவார்.
கொரோனா காலகட்டத்தில் ஷாஹித் அப்ரிடி தனது அறக்கட்டளை வழியாக பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில், ஷாஹித் அப்ரிடி அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இருவருமே தங்களது ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தி, சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…