பாரிஸ் ஒலிம்பிக் : 46 நொடிகளில் முடிந்த குத்து சண்டை போட்டி ..! நடந்தது என்ன?

Imane Khelif - Angela Carini , Boxing

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் கோலாகலமாக 33-வது ஒலிம்பிக் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை-26 ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் தொடர்நது வரும் ஆகஸ்ட்-11ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இதில் நேற்றைய 6-வது நாளில் மகளிருக்கான 66 கிலோ எடை பிரிவு போட்டியில் இத்தாலி வீராங்கனையான ஏஞ்சலா கரிணி, அல்ஜீரியா வீராங்கனையான இமன் கலிப்புடன் பல பரிட்சை நடத்தினார், இந்த போட்டி வெறும் 46 நொடிகளே நடைபெற்றது.

46-வது நொடியில் திடீரென்று இத்தாலி வீராங்கனை ஏஞ்சிலா இந்த போட்டியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனால் போட்டி மேற்கொண்டு நடைபெறாமல் நின்றது. அதன்பின் போட்டி முடிந்தவுடன் ஏஞ்சிலா கதறி அழுது புகாரளித்தார்.

இது குறித்து பேசிய அவர், “அல்ஜீரியாவின் இமன் கலிப் ஒரு பெண்ணே கிடையாது எனவும் அவர் ஒரு ஆண். அவரின் ஒரு குத்தை கூட என்னால் தாங்க முடியவில்லை, இது ஒரு ஆணின் குத்து போல தான் இருந்தது. மகளிருக்கான போட்டியில் ஒரு ஆணை விளையாட வைத்தது ஏற்க முடியாது”, என அவர் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன் பாலினத்தை அறியும் மருத்துவ தேர்வில் ஆணுக்குரிய DNA இமான் கலிபீடம் அதிகமாக இருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியானது.

இருப்பினும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமான் கலிபை மருத்துவ பரிசோதனை செய்து அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது. இது குறித்து ஒலிம்பிக் சம்மேளனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி கூறிய அவர், “மகளிர் பிரிவில் போட்டியிடும் அனைவருமே அதற்கான தகுதியை பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.

இதில் எந்த முறைகேடும் இல்லை. இமான் கலிபின் பாஸ்போர்ட்டில் அவர் மகளிர் என்று தான் இருக்கிறது. அவர் மகளிர் என்பதால் தான் இந்த குத்து சண்டை போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தேவையில்லாமல் ஊடகங்கள் இமான் கலீப் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம், ” என கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்