தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. கேப்டன்கள் ரோஹித் சர்மா மற்றும் டெம்பா பவுமா பங்கேற்கும் பாக்சிங் டே டெஸ்ட் சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சாதனைகளை பற்றி பார்க்கலாம். இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 22 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வி 3 போட்டிகளில் டிரா செய்துள்ளது. மறுபுறம் இந்த மைதானத்தில் விளையாடிய இந்தியா 3 போட்டிகளில் விளையாடி1 வெற்றியும், 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தமைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 330 ஆகும். 330 ரன்கள் கணிசமானதாக இருந்த போதிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா 2020 இல் இலங்கைக்கு எதிராக 621/10 என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மாறாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2016 இல் 101/10 என்ற குறைந்த ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததுள்ளது. 2014ல் ஹசிம் அம்லாவின் 208 ரன்களே இந்த மைதானத்தில் சிறந்த தனிநபர் பேட்டிங் ஸ்கோராக உள்ளது. அதேபோல், 2016-ல் ககிசோ ரபாடா 144 ரன்களுக்கு 13 விக்கெட்டுகள் எடுத்தது சிறந்த பந்துவீச்சு பதிவு செய்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…