மழையால் பாதியில் நின்ற “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி…!
ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க மறுபுறம் விளையாடி இருந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்னில் வெளியேறினார்.
“பாக்சிங் டே டெஸ்ட்” என்றால் என்ன தெரியுமா ..? இதோ முழு விவரம்..!
அடுத்து களத்தில் ஸ்மித் ,மார்னஸ் லாபுசாக்னே இருவரும் விளையாடி வந்தபோது மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் லாபுஷாக்னே 47 பந்துகளில் 14* ரன்களுடனும் , ஸ்மித் 26 பந்துகளில் 2* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். கவாஜா ஆட்டமிழந்ததிலிருந்து 57 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டு தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.