லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனைவியுடன் சாலையை கடந்து கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக அவள் எனக்கு சில அடிகள் தள்ளி இருந்தாள். அப்போது திடீரென இரண்டு பேர் என்னிடம் ஓடி வந்து எனது முகத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, எனது வாட்சை பறித்து சென்றார்கள். நல்லவேளை நானும் எனது மனைவியும் பாதுகாப்பாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அமீர்கானின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை பதிந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…