இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது-இலங்கை அணி கேப்டன்..!

இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளது என இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இன்று மதியம் 3 மணியளவில் முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடக்கிறது. இதில் இளம்வீரர்களை கொண்டு இந்திய அணி தவான் தலைமையில் விளையாடுகிறது.
இலங்கை கேப்டன் தசுன் ஷானகா தற்போது தெரிவித்துள்ளதாவது, இரண்டு அணிகளும் சமமாக தொடங்கும். இந்திய அணியில் புதிய வீரர்களை கொண்டு வந்துள்ளனர். மேலும், இவர்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாடியதை பார்த்துள்ளோம். இருந்தபோதிலும், இவர்கள் சர்வதேச தொடர்களில் இதுவரை விளையாடவில்லை. அதனால் இரண்டு அணிகளுக்குமே சமமான வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025