போரால் மூன்று முறை ஒலிம்பிக் போட்டி ரத்து.!
ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு பிறகு தள்ளி வைப்பதாக கூறியது.ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றின் மூன்று முறை மட்டுமே ரத்தாகி உள்ளது. உலகப் போர்கள் காரணமாக 1916 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியும் , 1940-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியும் 1944 -ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியும் ரத்தானது.
அதன் பிறகு தற்போது முதல்முறையாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.