ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..! 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று போபண்ணா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. டென்னிஸ் போட்டிகளில் உலகக் புகழ்பெற்ற தொடராக ஆஸ்திரேலிய ஓபன் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சிமோன் பொலேல்லி, ஆண்ட்ரியா வவஸ்ஸோரி ஜோடியை எதிர்கொண்டது.

ஒல்லி போப் அதிரடி பேட்டிங்! இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை!

இதில், போபண்ணா – எப்டன் ஜோடி 7-6 (0), 7-5 என்ற செட்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் 43 வயதான போபண்ணா, அதிக வயதில் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சாதனையாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்