ஐபிஎல்லில் இத்தனை கோடிக்கு ஏலமெடுத்தது வீண்போகவில்லை.! சதம் அடித்து அசத்திய பானிபூரி இளைஞர்.!
- இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜைஸ்வால் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார்.
- ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால், தற்போது யு19 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என குறிப்பிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் யாசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார். இடத்தொடர் முழுவதும் யாஷஸ்வி சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது முயற்சிக்கு தக்கபலன் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது, இவர் சிறுவயதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மும்பைக்கு வந்தபின், வசிக்க வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும், என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டார். ஆனால் இருவருடன் இருந்ததோ வறுமை மட்டும்தான். அப்போது இடைவிடா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இவர் மைதானத்தில் உள்ள முகாமில் தங்கியிருந்தார். பின்னர் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில், விடாமுயற்சியும் அயராத உழைப்பும், மேற்கொண்ட ஜெய்ஸ்வால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட மும்பை அணியில் இடம் பிடித்தார். பின்னர் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரளவைத்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் தற்போது நடந்து வரும் U19 உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்தது. இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்-2020க்கான ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ.2 கோடியே 40 லட்சதுக்கு ஏலமெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.