இந்திய பந்துவீச்சாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.! மனம் திறந்த நியூசிலாந்து வீரர்.!

- நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார்.
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 T20 இந்தியாவும், 3 ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பு பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், அப்போது இந்திய அணியின் நட்சித்திர பந்துவீச்சாளர் பும்ராவை மட்டுமே குறிவைத்து விளையாடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள். அதிலும் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திருப்பினால் இந்திய அணி வேறொரு தோற்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், இந்திய அணி உலக தரத்திலான பேட்ஸ்மேன்களை தரவரிசையில் வைத்துள்ளது. அதனால் நாங்கள் சிறப்பாக மற்றும் முழு திறமையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனிடையே ராஸ் டெய்லருக்கு இந்தியாவுடன் மோதும் போட்டி அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இதுகுறித்து பேசிய அவர், 100-வது போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இதற்காக முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் என குறிப்பிட்டார். பின்னர் நான் தொடர்ந்து அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025