மீண்டும் அசத்திய பெத் மூனி…! 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி!
இன்று நடைபெற்ற டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்த் விளையாடியது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதன்பிறகு, சிறுது நேரத்தில் முதல் விக்கெட்டை இழந்தாலும் நிதானமான ஆட்டதையே வெளிப்படுத்தியது. முதல் 10 ஓவர்களில் சற்று அதிரடி காட்டி விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு, விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ரன்களை சேர்த்தது. இருப்பினும், 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய 148 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன்கள் எடுத்திருந்தார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியிலும் பெத் மூனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல நியூஸிலாந்து மகளிர் அணியில் சிறப்பாக பந்து வீசிய அமீலியா கெர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார்.
அதன்பிறகு, நியூஸிலாந்து மகளிர் அணி 149 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது. நியூஸிலாந்து அணி எதிர்பார்த்ததை போல அல்லாமல் எதிர்மறையாக அந்த பிட்ச் அந்த அணிக்கு அமைந்திருந்தது. இதனால், ரன்ஸ் எடுக்க நியூஸிலாந்து மகளிர் அணி திணறியது. மேலும், ஆஸ்திரேலிய அணியும் மிக சிறப்பான ஒரு பவுலிங் தாக்குதலை அந்த அணிக்கு எதிராக செய்தது.
இதனால், மேலும் நியூஸிலாந்து அணி தடுமாறியது. மேலும், அந்த அணியில் நிலைத்து நின்று விளையாடிய அமீலியா கெர்ரும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேற்கொண்டு எந்த வீராங்கனையும் நிலைத்தது விளையாடததால் அந்த அணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதன் காரணமாக 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் என்ற பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.