கெஞ்சிய விராட் கோலி! நடு விரலை காட்டியதால் வந்த பெரிய பிரச்சனை?
தயவுசெய்து என்னை தடை செய்யாதீர்கள் என அதிகாரியிடம் கெஞ்சியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா : விராட் கோலி தன்னுடைய திறமையான பேட்டிங்கிற்கு எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ, அதே அளவுக்கு ஆக்ரோஷமாக அவர் எதாவது செய்யும் விஷயங்களிலும் பேசும் பொருளாக அமைந்துவிடுவார். இப்போது மட்டுமல்ல, விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்ப காலட்டத்தில் இருந்தே, மைதானத்தில் செய்யும் விஷயங்கள் சர்ச்சைகளை மாறி வருகிறது என்றே சொல்லலாம்.
அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து சிட்னி மைதானத்தில் விளையாடினார். அந்த போட்டியில் விராட் கோலி செய்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்தது என்றே சொல்லலாம். அந்த போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கூட்டமாக கூச்சலிட்டு கொண்டு இருந்தார்கள்.
அந்த சந்தங்களை கேட்டு, சற்று கடுப்பான விராட் கோலி சத்தத்தை அமைதி படுத்துவதற்காக பின் வரும் விளைவுகளை உணராமல் நடுவிரலை காட்டினார். இதனை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாட்களில் விராட் கோலி செய்த இந்த செயல் தான் தலைப்பு செய்திகளும் இடம்பிடித்தது என்றே கூறலாம். இதன் காரணமாக விராட் கோலி செய்த செயலுக்கு கண்டனங்களும் அந்த சமயம் எழுந்தது.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், போட்டியின் அதிகாரி (match referee) விராட் கோலியை நேரில் அழைத்தாராம். அழைத்த பிறகு அங்கு என்ன நடந்தது என விராட் கோலியிடம் கேட்க அதற்கு விராட் கோலி கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும் என்பதால் அப்படி செய்தேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இப்படி செய்துவிட்டு இதற்கு பெயர் வேடிக்கையா? என்பது போல கடுப்பான போட்டியின் அதிகாரி விராட் கோலி செய்த அந்த செயல் செய்தித்தாளில் வந்திருந்ததை தூக்கி விராட் கோலி முகத்தில் வீசினாராம். அதிகாரி, கோபமடைந்ததை பார்த்த விராட் கோலி தெரியாமல் வேடிக்கைக்காக, செய்துவிட்டேன். செய்த தவறை நினைந்து வருந்துகிறேன். தயவு செய்து எனக்கு தடை கொடுத்து விடாதீர்கள் என கெஞ்சினாராம்.
தன்னுடைய தவறை உணர்ந்து வருந்திய காரணத்தால் போட்டியின் அதிகாரி இனிமேல் இது போன்று செய்யக்கூடாது என்பது போல எச்சரித்தாராம். இந்த சம்பவத்தை பல ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்திருக்கிறார்.