இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு.!
இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன எனபிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி மிரட்டி வருகிறது. இதையடுத்து, கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா..? அல்லது நடைபெறாமல் இருக்குமா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன எனவும், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித்தொடரை நடத்தலாமா..? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.