முகமது ஷமிக்குப் பதிலாக முக்கிய பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்படவில்லை என்பதால் கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்திற்காக விளையாடி வரும் அவேஷ், தற்போது பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவேஷ் கான் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

1 hour ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

2 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

6 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

6 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

7 hours ago