இந்தியாவில் டி20 தொடரை தொடர்ந்து T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

T10 cricket league

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலக நாடுகளை கவர்ந்த மிக பிரபலமான தொடராகும். கால்பந்து தொடருக்கு அடுத்து உலக அளவில் ஐபிஎல் தொடர் மிக வெகுவாக கவரப்பட்ட தொடர் என்றே கூறலாம். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது, 17-வது ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடத்த பிசிசிஐ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.  ஐபிஎல் மூலம் உலக அளவில் உள்ள திறமையாளர்கள் கண்டறியப்பட்டன, ரசிகர் பட்டாளம் அதிகரிப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் வாரியம் பெரும் வருவாயை ஈட்டி வருகிறது.

டி20 உலகக் கோப்பை அணியில் இவர்கள் இருக்க வேண்டும்… ஹர்பஜன் சிங்..

அதன் வெற்றி மற்ற நாடுகளையும் இதே போன்ற லீக்குகளைத் தொடங்கத் தூண்டியது. இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வெற்றியால் ஈர்க்கப்பட்டு, 2024ம் ஆண்டிலேயே டயர்-2 கிரிக்கெட் (டி10) லீக்கை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முன்மொழியப்பட்ட டி10 லீக்கிற்கான வரைபடத்தை உருவாக்கி வருவதாவும்,  சாத்தியமான ஸ்பான்சர்கள் உட்பட பங்குதாரர்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய கிரிக்கெட் லீக் தொடரை அடுத்தாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்