கிரிக்கெட்டுக்குள் அரசியல் செய்த பிசிசிஐ? அதிரடியாக எச்சரிக்கை கொடுத்த ஐசிசி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் பொறிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்த நாட்டின் பெயரை மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் அச்சிடப்பட்டு அந்த டிசர்டில் தான் விளையாடுவார்கள். ஆனால், பாகிஸ்தான் அணி பெயரை நாங்கள் அச்சிட்டு விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுப்பு தெரிவித்த பிசிசிஐ ?
பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோ அணிகளின் ஜெர்சியில் இடம்பெறும். எனினும், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல், துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருப்பதால், ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அச்சிட வேண்டிய அவசியம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமின்றி, இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருப்பதன் காரணமாக சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கான கேப்டன்கள் சந்திப்பு மற்றும் போட்டோஷூட்க்காக இந்திய கேப்டன் ரோஹித் பாகிஸ்தான் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.
சமீபத்தில் இந்தியா Host செய்திருந்த 2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற ODI உலக கோப்பை தொடரில் பங்கேற்று, இந்தியாவுக்கே வந்து விளையாடிய பாகிஸ்தான், தங்களது ஜெர்ஸிகளில் இந்தியா பெயரை அச்சடித்திருந்தது. பாகிஸ்தான் எந்த தயக்கமும் இல்லாமல் இந்த விஷயத்தை செய்திருந்த நிலையில், பிசிசிஐ இதனை செய்ய மறுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வேதனையடைய செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேதனை
பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” கிரிக்கெட் எனும் விளையாட்டிற்குள் பிசிசிஐ அரசியலை கொண்டு வருகிறது என்பது சரியானதாக இல்லை. விளையாட்டிற்கு இது நல்லதல்ல. பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். CT தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை.
இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் போட்டியை நடத்தும் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு ஐசிசி அனுமதிக்காது என்றும், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஐசிசி அதிரடி
இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு ” விதிமுறைகளின் படி, நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோ அணிகளின் ஜெர்சியில் இடம்பெற வேண்டும். அப்படி இல்லை விதியை மீறினால் நிச்சியமாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் உத்தரவுபோட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். போட்டியின் சின்னத்தை தங்கள் ஜெர்சியில் சேர்ப்பது ஒவ்வொரு அணியினதும் பொறுப்பாகும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.