ஒரு ஓவர் பேட்டிங்.! கிரிக்கெட் வீராங்கனை சவாலை ஏற்ற சச்சின்.!

Default Image

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை “புஷ்ஃபயர் பாஷ்” என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கிரிக்கெட் வீராங்கனை சவாலை ஏற்ற சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்யவுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த பல நாட்களாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மெல்போர்னில் நாளை( ஞாயிற்றுக்கிழமை) “புஷ்ஃபயர் பாஷ்” என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் விளையாடவுள்ளனர். இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளர்களாக சச்சின் தெண்டுல்கரும் , ஷேன் வார்னே அணிக்கு பயிற்சியாளர்களாக கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்க சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர் என குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்