INDvBAN : தந்திரத்தை பயன்படுத்திய வங்கதேச வீரர்கள்! வலையில் விழுந்த ரிஷப் பண்ட்!
வங்கதேசத்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் லிட்டன் தாஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை : வங்கதேசம் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே சொதப்பிக் கொண்டு இருந்தது. ஏனென்றால், தொடர்ச்சியாக அணியில் விக்கெட் விழுந்த காரணத்தால் குறைவான ரன்களை எடுத்திருந்தது.
அதன்பிறகு ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் நிதானமாக ரன் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் அதிரடி கலந்த நிதானத்துடன் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்படி விளையாடி கொண்டிருந்த ரிஷப் பண்டை எதிரணி வீரர்கள் தங்களுடைய யுக்தியைப் பயன்படுத்தி கடுப்பாக்கச் செய்தனர்.
ரிஷப் பண்ட் விளையாடிக் கொண்டிருந்த போது, வங்கதேச வீரர்கள் வேண்டுமென்றே பந்தை ரிஷப் பண்ட் மீது எறிய முற்படுவது போன்ற மோசமான செயலில் ஈடுபட்டனர். நம்மளை கோபப்படுத்திப் பார்ப்பவர்களை சும்மா விடமுடியுமா? என ஆவேசத்துடன், ரிஷப் பண்ட் வங்கதேசத்து கேப்டன் லித்தன் தாஸிடம் சென்று என் மீது எதற்காக பந்து ஏறிய வந்தீர்கள் என்று கேட்டார்.
ரிஷப் பண்ட் கேட்டதற்கு பெரிதாக கோபம் முகத்தைக் காண்பித்துக் கொள்ளாமல், லித்தன் தாஸ் “நான் பந்தை எங்களுடைய வீரர்களிடம் கொடுக்க வேண்டும் அதனால் தூக்கி போட்டேன்” என சகஜமாக கூறினார். இருப்பினும் ரிஷப் பண்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் நடந்து அடுத்த சில நேரம் கழித்து பண்ட் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
எனவே, ரிஷப் பண்ட் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனைப் பார்த்த பலரும், வங்கதேசம் தன்னுடைய நரி தந்திர யுக்தியைப் பயன்படுத்தி ரிஷப் பண்ட்டை கோபமாக்கி அவருடைய விக்கெட்டை வீழ்த்தியுள்ளதாகக் கூறி வருகிறார்கள்.