இந்திய அணிக்கு சவாலாக அமையுமா டெஸ்ட் தொடர்? 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேசம்!
நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
சென்னை : இந்த மாதம் இறுதியில் செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
அதில் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதற்கு துலிப் ட்ராபி தொடர் முடியாமல் எப்படி அணியை அறிவிக்கலாம் என ஒரு தரப்பு ரசிகர்கள், பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பார்க்கும் போது வங்கதேச அணியை எளிதில் வீழ்த்துவார்கள் என கருதப்படுகிறது. இருப்பினும் இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் வங்கதேச அணியை அதிகாரப்பூர்வமாக இன்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அணி தான் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு டெஸ்ட் தொடர் விளையாடிய வங்கதேச அணி, கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று மற்றும் அந்த தொடரையும் கைப்பற்றி இருந்தது.
இதன் விளைவாக கடினமான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் இந்திய அணியையும் நடைபெற போகும் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவார்கள் என செட்டிசன்கள் கூறிவந்தனர். மேலும், பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடிய அதே வங்கதேச அணி சற்றும் மாறாமல் அப்படியே இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர்.
இதனால் நடைபெறப் போகும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வங்கதேச அணி சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே அணியாக இருந்தாலும் வங்கதேச அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்துள்ளனர். அணியின் ஒரு முக்கிய வீரரான ஷோரிஃபுல் இஸ்லாம் காயம் காரணமாக இந்த இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
அறிவிக்கப்பட்ட வங்கதேச அணி :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தாஸ் சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
பிசிசிஐ அறிவித்த இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.