கத்தாரில் உலகக் கோப்பை தொடரின் போது மைதானங்களில் மது விற்பனைக்கு தடை! அதிரடி உத்தரவு.!
கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் போது மைதானங்களில் மது விற்பனைக்கு தடை.
கத்தாரில் இன்னும் இரு தினங்களில் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் எட்டு மைதானங்களில் பீர் போன்ற மதுபானம் விற்க கத்தார் அரசு தடை விதித்துள்ளது.
ஆரம்பத்தில், ஃபிஃபா(FIFA) ஸ்பான்சர், பட்வைசர் மட்டுமே கத்தார் உலகக் கோப்பை அதிகாரப்பூர்வ மைதானங்களில் விற்க அனுமதிக்கப்பட்ட ஒரே பீர் ஆகும். பட்வைசர் 1986 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையின் பிராண்டாக இருந்து வருகிறது.
செப்டம்பர் மாதம் கத்தாரில் நடந்த கூட்டத்தில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கத்தார் நாட்டில் உள்ள மைதானங்களில் ரசிகர்களுக்கு மதுவுடன் பீர் வழங்குவதற்கான கொள்கையை உலகக் கோப்பையின் அமைப்பாளர்கள், உறுதி செய்தனர்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடர் நவ-20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. உலகத்திலுள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுக்கும் அளவுக்கான மிகப்பெரிய தொடர் கத்தாரில் தொடங்க இருக்கிறது.
பட்வைசருடன் ஃபிஃபா அமைப்பு $75 மில்லியன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் உரிமம் பெற்ற ஹோட்டல் உணவகங்கள் மற்றும் பார்களில் மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது. அதை தவிர வேறு இடத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.