பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார். நேற்று மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்றார். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அதே பத்திரிகையாளர் சந்திப்பில், சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா, பிரதமர் மோடிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாததால் பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருவதாக பஜ்ரங் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பஜ்ரங் பதிவிட்ட பதிவில்”2019-ம் ஆண்டு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கேல் ரத்னா மற்றும் அர்ஜுன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த விருது கிடைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாழ்க்கை வெற்றி பெற்றதாகத் தோன்றியது. ஆனால் இன்று நான் அதை விட வருத்தமாக இருக்கிறேன். இந்த மரியாதைகள் என்னை காயப்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான நடந்த போராட்டம் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. 29 வயதான பஜ்ரங் புனியாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். பிரிஜ் பூஷன் சரண் சிங் பாஜக எம்.பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஜ்ரங் புனியா வாங்கிய பதக்க பட்டியல்:
ஒலிம்பிக் விளையாட்டுகள்:
டோக்கியோ ஒலிம்பிக் 2020 (65 கிலோ): வெண்கலம்
உலக சாம்பியன்ஷிப் விளையாட்டுகள்:
புடாபெஸ்ட் 2018 (65 கிலோ): வெள்ளி
புடாபெஸ்ட் 2013 (60 கிலோ): வெண்கலம்
நூர்-சுல்தான் 2019 (65 கிலோ): வெண்கலம்
பெல்கிரேடு 2022 (65 கிலோ): வெண்கலம்
ஆசிய விளையாட்டு விளையாட்டுகள் :
ஜகார்த்தா 2018 (65 கிலோ): தங்கம்
இன்சியான் 2014 (61 கிலோ): வெள்ளி
காமன்வெல்த் விளையாட்டுகள் :
கோல்ட் கோஸ்ட் 2018 (65 கிலோ): தங்கம்
பர்மிங்காம் 2022 (65 கிலோ): தங்கம்
கிளாஸ்கோ 2014 (61 கிலோ): வெள்ளி
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…