இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் 21-15 15-21 21-19 என்ற கணக்கில் சிந்து தோற்கடித்தார். அதன்படி,இப்போட்டியை கடுமையாகப் போராடி வென்றதன் மூலம் பி.வி.சிந்து,உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.
இந்நிலையில்,இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,உலக நம்பர் 6 மற்றும் தென்கொரிய வீராங்கனையான ஆன் சியோங்கை எதிர்த்து விளையாடவுள்ளார். இப்போட்டியில்,சிந்து சியோங்கை வீழ்த்தி பட்டம் வெல்வாரா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முன்னதாக,பி.வி. சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார் .BWF வேர்ல்ட் டூர் பைனலுக்கு வருவதற்கு முன், அவர் தனது கடைசி மூன்று நிகழ்வுகளான பிரெஞ்ச் ஓபன், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தோனேசியா ஓபன் ஆகியவற்றில் அரையிறுதியை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…