பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 2-வது முறையாக கொரோனா..!

பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்களாக சர்வதேச போட்டிகள் பாதித்ததை அடுத்து இன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில், பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் இப்போது ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் இன்று முதல் 17 வரை நடைபெறும். இதன் பின்னர், டொயோட்டா தாய்லாந்து ஓபன் ஜனவரி 19 முதல் 24 வரை மற்றும் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள் ஜனவரி 27 முதல் 31 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக் புறப்படும் முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து பாங்காக் வந்தனர். சாய்னா நேவால் ஏற்கெனவே கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024