பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பிவி சிந்து -பிவி ரமணா தகவல்..!

Published by
Edison

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து,ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என்று அவரது தனத்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து,நேற்று நடைபெற்ற  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13,21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார்.இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

பிவி ரமணா:

இந்நிலையில்,சிந்துவின் தந்தை பிவி ரமணா,”பேட்மிண்டன் சூப்பர் ஸ்டாரான சிந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா திரும்பியவுடன் பிரதமரை சந்திப்பார்” என்று கூறினார்.

பிரதமருடன் ஐஸ்கிரீம்:

மேலும்,அவர் கூறுகையில்:”ஆகஸ்ட் 3 ஆம் தேதி சிந்து வருகிறார் என்று நினைக்கிறேன்.அதற்காக,நான் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன். ஒலிம்பிக்கில் நாட்டுக்காக எங்களால் முடிந்த அளவு பதக்கங்களை நாங்கள் பெற வேண்டும்.முன்னதாக பிரதமர் மோடி, நீங்கள் போங்கள், நீங்கள் திரும்பி வரும்போது நாம் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் என்று சிந்துவிடம்  உற்சாகம் அளிக்கும் விதமாக கூறியிருந்தார்.இதனால்,பிவி சிந்து தற்போது நிச்சயமாக பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார், “என்று ரமணா கூறினார்.

ஐஸ்கிரீம் சாப்பிட தடை:

ஏனெனில்,2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ இணைப்பு மூலம் உரையாடினார், பிவி சிந்துவும் அவர்களில் ஒருவராக இருந்தார்.இந்த அமர்வின் போது, பிரதமர் மோடி சிந்துவிடம் உணவு கட்டுப்பாடு பற்றி கேலியாக கேட்டார் மற்றும் இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஐஸ்கிரீம் சாப்பிட தடை விதித்ததை நினைவு கூர்ந்தார்.

உணவுக் கட்டுப்பாடு:

அதற்கு பதிலளித்த சிந்து, “ஒலிம்பிக்கிற்கு முன்பு நான் என் உணவைக் கட்டுப்படுத்துகிறேன்,அதனால் நான் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. எப்போதாவது மட்டுமே சாப்பிடுவேன்”, என்று தெரிவித்தார்.

பிரதமர் உறுதி:

இதனையடுத்து,பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு அவருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உறுதியளித்து கூறியதாவது: “கடினமாக உழைக்கவும், நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நீங்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் இருந்து திரும்பும்போது, நான் உங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்,” என்று கூறினார்.

வாழ்த்து:

இதற்கிடையில்,வெண்கலம் வென்றதற்காக பிவி சிந்துவை வாழ்த்திய பிரதமர் மோடி,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”பிவி சிந்துவின் நட்சத்திர செயல்திறனால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் நமது மிகச்சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago