Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ..!

Published by
அகில் R

Badminton : இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரரான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று சாய்  பிரனீத் அவரது x சமூகத்தளத்தில் சர்வதேச பேட்மிண்டன்லிருந்து ஓய்வு பெறுவதாக உணர்ச்சி மிக்க கூறி பதிவிட்டு இருந்தார். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்றார். அதன் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார்.

Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

மேலும், 2019 -ம் ஆண்டு நடைபெற்ற பேட்மிண்டன் உலக சாம்பியன் தொடரில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். BWF சர்வதேச தொடரை 6 முறையும், BWF கிராண்ட் பிரிக்ஸ் தொடரை இரண்டு முறையும் வென்றுள்ளார். 2017 நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் தொடரில் இந்திய பேட்மிண்டன் வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பியை வீழ்த்தி அந்த தொடரை கைப்பற்றினார். தற்போது,  31-வயதில் சாய்  பிரனீத் சர்வதேச பேட்மிண்டன்லிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

நேற்று இவர், ” 24 ஆண்டுகளுக்கும் மேலாக எனது உயிர் நாடியாக இருந்த விளையாட்டிலிருந்து  ஓய்வு பெறுவதாக இந்த வார்த்தைகளை நான் எழுதுகிறேன். நான் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது, ​​நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இந்த பேட்மிண்டன் பயணம் என்னை இங்கு ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Read More :- IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!

பேட்மிண்டன் தான் என் முதல் காதல், என் நிலையான துணை, என்னை வடிவமைத்ததும் இந்த பேட்மிண்டன் விளையாட்டு தான். நான், பேட்மிண்டன் விளையாட்டுடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள், நான் கடந்து வந்த சவால்கள் எல்லாம் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த ஆண்டில் வருகிற ஏப்ரல் மாதத்தில் நான் அமெரிக்காவில் உள்ள பிரமிட் பேட்மிண்டன் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக சேர உள்ளேன்.

எனவே, அங்குள்ள அனைத்து வீரர்களையும் நான் மேற்பார்வையிடுவேன். மேலும், என்னை ஆதரித்த பயிச்சியாளார்களான ஆரிஃப் சார் மற்றும் கோவர்தன் சார் மற்றும் ரசிகர்கள் எல்லாருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்”, என்று அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Recent Posts

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

2 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

2 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

4 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

5 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

5 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

6 hours ago