அன்று தடை செய்யப்பட்ட அசாருதீன்இன்று கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ..!

ஐதராபாத் உள்ள கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியானது.இதில் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் மற்றும் கே.திலிப் குமார் ஆகியோர் நின்றனர்.
அசாருதீன் 223 வாக்குகளில் 147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்க்கும் , திலிப் 3 வாக்குகள் பெற்றனர்.அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,216 ரன்களும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9,378 ரன்களும் குவித்தார்.
மேலும் அசாருதீன் தலைமையில் 1992, 1996 மற்றும் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அவரது தலைமையில் விளையாடியது.
2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பணம் வாங்கி கொண்டு மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.
தனக்கு விதித்த வாழ்நாள் தடையை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கிய வாழ்நாள் தடையை நீக்கியது.
2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதிக்கு எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.