விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்றபோது தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதற்காக கோப்பையை வென்ற இந்திய அணியின் சக வீரர்கள் சச்சினை தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க சுற்றிய போது மொத்த மைதானமும் சச்சின், என முழுக்கமிட்டனர். இந்நிலையில், தோள்களில் தூக்கிச் சென்ற சிறந்த தருணத்தை வைத்தே சச்சின் இந்த லாரியஸ் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதுப் பட்டியலில் இருந்த 20 பேரில் பொதுமக்கள் சச்சினுக்கு அதிகளவில் வாக்களித்திருந்தனர்.
மேலும் கால்பந்து வீரர் மெஸ்சி, கார்பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோருக்கும் இதே விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை பெற்ற சச்சின் பேசுகையில், உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது அது ரொம்ப கடினம். வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும் என்றும், மிகவும் அரிதாகவே நாடே ஒன்றைக் கொண்டாடுகிறது என்றால் அது வியக்கத்தக்க தருணம் என்று தெரிவித்தார். இதையடுத்து விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நினைவுபடுத்திக்கிறது. இது நம் வாழ்க்கையில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறது என்றும், இப்போது கூட அதைப்பார்த்தால் அந்தத் தருணம் மீண்டும் நான் வாழும் தருணமாகவே உள்ளது என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…