AUSvsPAK: பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்தை பறக்க விட்ட வார்னர், மரன்ஸ்..!தடுமாறும் பாகிஸ்தான் ..!

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து இறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது.இதனால் பாகிஸ்தான் அணி 86.2 ஓவரில் 240 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.இதை தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஜோ பர்ன்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும் ,சிறப்பாகவும் விளையாடி வந்த இருவரும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதம் விளாசினார். ஆனால் ஜோ பர்ன்ஸ் சதம் அடிக்காமல் 166 பந்திற்கு 97 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் இறங்கிய மரன்ஸ் அரைசதம் விளாசினார்இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை இழந்து 312 ரன்கள் அடித்து இருந்தது.களத்தில் மரன்ஸ் 55 , டேவிட் வார்னர் 151 ரன்களுடன்இருந்தனர்.
இதை தொடர்ந்து இன்று தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது.ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டேவிட் வார்னர் 154 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் இறங்கிய ஸ்மித் 4 ரன் எடுத்து வெளியேறினர்.
இதை தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடிய மரன்ஸ் 185 ரன்கள் குவித்தார்.மத்தியில் இறங்கிய மத்தேயு வேட் 60 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலியா அணி 580 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா 4 , ஷாஹீன் , ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025