AUS VS PAK டெஸ்ட் தொடர்- முச்சதம் விளாசிய டேவிட் வார்னர்..!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த நவம்பர் 3-ம் தேதி பாக்கிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி முதல் போட்டியை கைப்பற்றியது.
நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் விளையாடினர். அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும், பர்னிஸும் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கினார்கள் அப்ரிடி பந்து வீச்சில் பர்னிஸ் ஆட்டமிழக்க வார்னருடன் இணைந்த மார்னஸ் லாபுசாக்னே, இருவரும் நிதானமாக விளையாடி சதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தனர். வார்னர் 166 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 126 ரன்களுடன் காலத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது இதில் 162 ரன்களுக்கு லாபுசாக்னே ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ஸ்மித் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில்  வார்னேரின் நிதானமான ஆட்டம் பாக்கிஸ்தான் அணி பந்து வீச்சை சிதறடித்தார். இரட்டை சதம் அடித்த வார்னர் தொடர்ந்து நன்றாக விளையாளாடி வார்னர் முச்சத்தை அடித்தார். இது அவரது முதல் முச்சதம் ஆகும். முச்சதம் அடித்த 7-வது ஆஸ்திரேலிய வீரரும் ஆவார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸை டிக்ளர் செய்தது. அதில் டேவிட் வார்னர் 335 ரன்கள் எடுத்து கடைசி வரை அட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதை தொடர்ந்து பாக்கிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

7 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

8 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

8 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

9 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

10 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago