AUS VS PAK டெஸ்ட் தொடர்- முச்சதம் விளாசிய டேவிட் வார்னர்..!
கடந்த நவம்பர் 3-ம் தேதி பாக்கிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி முதல் போட்டியை கைப்பற்றியது.
நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் விளையாடினர். அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும், பர்னிஸும் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கினார்கள் அப்ரிடி பந்து வீச்சில் பர்னிஸ் ஆட்டமிழக்க வார்னருடன் இணைந்த மார்னஸ் லாபுசாக்னே, இருவரும் நிதானமாக விளையாடி சதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தனர். வார்னர் 166 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 126 ரன்களுடன் காலத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது இதில் 162 ரன்களுக்கு லாபுசாக்னே ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ஸ்மித் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் வார்னேரின் நிதானமான ஆட்டம் பாக்கிஸ்தான் அணி பந்து வீச்சை சிதறடித்தார். இரட்டை சதம் அடித்த வார்னர் தொடர்ந்து நன்றாக விளையாளாடி வார்னர் முச்சத்தை அடித்தார். இது அவரது முதல் முச்சதம் ஆகும். முச்சதம் அடித்த 7-வது ஆஸ்திரேலிய வீரரும் ஆவார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸை டிக்ளர் செய்தது. அதில் டேவிட் வார்னர் 335 ரன்கள் எடுத்து கடைசி வரை அட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதை தொடர்ந்து பாக்கிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.