நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), 4-6, 6-1, 6-1 டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினர்.
இந்நிலையில், இப்போட்டியின் போது நாற்காலி நடுவரைக் திட்டியதற்காகவும், அவரை ‘சின்னப் பூனை’ என்று அழைத்ததற்காகவும், உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆஸ்திரேலியாவுக்கு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக $ 8,000 மற்றும் தவறான நடத்தைக்காக $ 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியின் போது சிட்சிபாஸின் தந்தை தனது மகனுக்கு விதிகளை மீறி அறிவுரைகளை வழங்குவதைக் காண முடிந்தது. ஆனால், நடுவரின் அலட்சியத்தால் பொறுமை இழந்த மெத்வதேவ் இடைவேளையின் போது நாற்காலி நடுவரை கோபமாகப் பார்த்து திட்டினார். என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…