Australian Open: நடுவரைக் திட்டிய டேனியல் மெத்வதேவுக்கு 9 லட்சம் அபராதம் ..!

Default Image

நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில்  மெத்வதேவ்,  கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில்  ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5),  4-6, 6-1, 6-1 டேனியல் மெத்வதேவ்  வீழ்த்தினர்.

இந்நிலையில், இப்போட்டியின் போது நாற்காலி நடுவரைக் திட்டியதற்காகவும், அவரை ‘சின்னப் பூனை’ என்று அழைத்ததற்காகவும், உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆஸ்திரேலியாவுக்கு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக $ 8,000 மற்றும் தவறான நடத்தைக்காக $ 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியின் போது  சிட்சிபாஸின் தந்தை தனது மகனுக்கு விதிகளை மீறி அறிவுரைகளை வழங்குவதைக் காண முடிந்தது. ஆனால், நடுவரின் அலட்சியத்தால் பொறுமை இழந்த மெத்வதேவ் இடைவேளையின் போது நாற்காலி நடுவரை கோபமாகப் பார்த்து திட்டினார். என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்