ஆஸ்திரேலியா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பார்ட்டி..!
இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி.
ஆஸ்திரேலிய ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆஷ்லி பார்ட்டி தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இந்த இறுதிப் போட்டியில், பார்ட்டி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் டேனியேல்லே காலின்ஸை தோற்கடித்து முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
சரித்திரம் படைத்த ஆஷ்லி பார்ட்டி:
44 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓப்பனில் பட்டம் வெல்லும் ஆஸ்திரேலியாவை சார்ந்த முதல் பெண்மணி ஆவார். கிறிஸ் ஓ நீல் கடைசியாக 1978-இல் இந்த பட்டத்தை வென்றார். அதே சமயம் டேனியேல்லே காலின்ஸ் முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தார்.
25 வயதான பார்டி இந்த இறுதிப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதிக சிரமமின்றி முதல் செட்டை எளிதாக வென்றார். ஆனால் உண்மையான த்ரில் இரண்டாவது செட்டில் காட்டப்பட்டது. ஆரம்பத்திலேயே பார்ட்டியின் சர்வீஸை இரண்டு முறை முறியடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் காலின்ஸ்.
காலின்ஸும் தனது சர்வீஸை தக்கவைத்து உடனடியாக 5-1 என முன்னிலை பெற்றார். இந்த ஆட்டம் மூன்றாவது செட் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் பார்ட்டி கடைசி நேரத்தில் காலின்ஸ் தனது திறமையால் 7-6 என்ற நேர்செட் கணக்கில் டேனியேல்லே காலின்ஸை வென்று தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
பார்ட்டியின் மூன்றாவது பட்டம்:
ஆஷ்லே பார்டிக்கு இது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 2019-ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை முதலில் வென்றார். இதற்குப் பிறகு பார்ட்டி கடந்த 2021-ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
Win a Grand Slam on home soil? Completed it mate ????????????@ashbarty defeats Danielle Collins 6-3 7-6(2) to become the #AO2022 women’s singles champion.
????: @wwos • @espn • @eurosport • @wowowtennis #AusOpen pic.twitter.com/TwXQ9GACBS
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022