ஆஸி. ஓபன் தொடரில் இருந்து வெளியேறிய ரஃபேல் நடால்..!

Published by
murugan

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்க்கான அறுவைச் சிகிச்சையை 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால் செய்து கொண்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அவர் விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் போட்டியில் 2020 யு.எஸ். ஓபன் சாம்பியனும் முன்னாள் நம்பர். 3-வது இடமான டொமினிக் தீமை தோற்கடித்தார்.

பின்னர், கடந்த வியாழன் அன்று ஆஸ்திரேலியா வீரர் ஜேசன் குப்லரை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஃபேல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் ரஃபேல் நடால்  7-5, 6-7 (6/8), 3-6 என்ற செட்களில் உலகின் 48-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனிடம் போராடித் தோற்றாா்.

இந்நிலையில், நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில்  இருந்து விலகுவதாக அறிவித்தார்.  இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பதிவில்” நான் ஆண்டு முழுவதும் மிகவும் கடினமாக உழைத்தேன். எனக்கு வருத்தமான செய்தி என்னவென்றால், மெல்போர்னில் உள்ள கூட்டத்திற்கு முன்னால் என்னால் விளையாட முடியாது, இது மிகவும் மோசமான செய்தி அல்ல, ஏனென்றால் நான் ஆஸ்திரேலியாவில் விளையாட விரும்பினேன்.

சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மெல்போர்னில் இருந்து திரும்பிய பிறகு ஸ்கேன் செய்ததில் தசையில் சிறிய காயம் இருந்தது. இதனால் சிகிச்சைக்காக ஸ்பெயினுக்குத் திரும்புவதாக” தெரிவித்தார்.

 

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

4 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago