நேற்று ஆஸ்திரேலியா, இந்திய பெண்கள் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டைகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 259 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர் எட்டு விக்கெட் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி ரிச்சா கோஷ் சதத்திற்கு 4 ரன்கள் இருக்கும்போது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரிச்சா கோஷ் 117 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் எடுத்தார். 55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
ஒரு கட்டத்தில் இந்தியா 43.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. இருப்பினும் அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா (14), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (5) , அமன்ஜோத் கவுர் (4) ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். 36 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்த தீப்தி சர்மாவால் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…