ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள் அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, வெறும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதிபோட்டியில் ஷபாலி வர்மா சொதப்பியதால் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…