நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய முதல் ரோஹித் அதிரடியாக விளையாட மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடவந்தனர். இருப்பினும் 5-வது ஓவரின் 2-வது பந்தில் சுப்மன் கில் 4 ரன் எடுத்து விக்கெட் இழந்தார்.அடுத்து கோலி களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்கும் முயன்ற போது டிராவிஸ் ஹெட்டிடம் கேட்சை கொடுத்து அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 4 ரன்னில் வெளியேறினார்.பின்னர் விராட் கோலி ,கே.எல் ராகுல் இருவரும் கூட்டணி அமைத்து சற்று அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதம் பதிவு செய்தார். அடுத்து சில நிமிடங்களில் பாட் கம்மின்ஸ் ஓவரின் போல்ட் ஆகி 54 ரன்னில் வெளியேறினார்.அடுத்து வந்த ஜடேஜா 9, ஷமி 6, சூர்யகுமார் யாதவ் 18, பும்ரா 1 ரன் எடுத்து வெளியேறினர்.
இருப்பினும் கே.எல் ராகுல் நிதானமாகவும், சிறப்பாக விளையாடி 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும், ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் இலக்கு:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வர்னர், டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் வார்னர் ஒரு பவுண்டரி எடுத்து 7 ரன்னில் விராட் கோலியிடம் கேட்டுக் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அவரும் அந்த வேகத்தில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டர் என மொத்தம் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்மித் 4 ரன்னில் வெளியேற இதனால் ஆஸ்திரேலியா அணி 47 ரன்களுக்கு மூன்று விக்கெட் அடுத்தடுத்து பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே களத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் உடன் கூட்டணி அமைத்து நிதானமாக தங்களது ஆட்டத்தை தொடங்கினர். இவர்கள் விக்கெட்டை பறிக்க இந்திய அணி திணறியது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். இவர்களின் விக்கெட்டை பறிக்க ரோகித் சர்மா சுழல் மற்றும் வேக பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பந்துவீச்சு செய்தும் விக்கெட் பறிக்க முடியவில்லை.
நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 95 பந்தில் சதம் அடித்தார். மறுபுறம் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே 99 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டையும், ஷமி, சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும் , மார்னஸ் லாபுசாக்னே 58* ரன்களும் குவித்தனர்.
இவர்கள் இருவரும் கூட்டணியில் 192 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய 8-வது முறையும், இந்திய அணி 4-வது முறையும் விளையாடியது. இதில் இந்தியா இரண்டு முறையும், ஆஸ்திரேலியா 6 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…