AUSvPAK: 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் முன்னிலை..!

Published by
murugan

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே 63 ரன்களும்,  உஸ்மான் கவாஜா 42 ரன்களும், வார்னர் 38 ரன்களும், மிட்செல் மார்ஷ் 41 ரன்களும்  எடுத்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 264 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபீக் 62, கேப்டன் ஷான் மசூத் 54, முகமது ரிஸ்வான் 42, அமீர் ஜமால் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டையும், நாதன் லியோன் 4 விக்கெட்டையும் பறித்தனர்.

இதற்கிடையில் 54 ரன்கள் முன்னிலை உடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு 2-வது இன்னிங்ஸில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டு பந்திலே உஸ்மான் கவாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லாபுஸ்சாக்னே 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இருப்பின் மறுபுறம் விளையாடி வந்த டேவிட் வார்னர் ஆறு ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டிராவிஸ் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து கொடுத்தது. பின்னர் மிட்செல் மார்ஷ், ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை நிதானமாக விளையாடி அணியை மீட்டுக் கொண்டு வந்தனர் இதில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 130 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்து சத்தத்தை தவறவிட்டு வெளியேறினார் அதில் 13 பவுண்டரை அடங்கும்.

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்மித் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார்.  இந்நிலையில், 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 62.3 ஓவரில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 187 ரன்கள் எடுத்து 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Recent Posts

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

25 seconds ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

59 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

1 hour ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

2 hours ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago