மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துஇதைத்தொடந்து இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள் அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கி இந்திய அணி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களில் வெளியேற இந்திய அணி பரிதாபமான நிலையில் இருந்தபோது மத்தியில் இறங்கிய தீப்தி சர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி நிதானமாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா (33) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 19.1 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . மேலும் ஆஸ்திரேலியா அணி 5 முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…