AUSvIND: டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ஆஸ்திரேலியா.. சர்வதேச டி-20 போட்டியில் கால்பதிக்கும் நடராஜன்!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெறும் முதல் டி-20 போட்டியை விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனைதொடர்ந்து இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது. இந்த டி-20 போட்டி, கான்பெராவின் ஓவன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் யாக்கர் மன்னன் நடராஜன், இன்று தனது முதல் சர்வதேச டி-20 போட்டியில் விளையாடவுள்ளார்.
ஆடும் வீரர்களின் விபரம்:
ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டி’ஆர்சி ஷார்ட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இந்தியா:
ஷிகர் தவான், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பீர் ), விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, நடராஜன்.