ஆடியன்ஸ் இல்லாத ஐபிஎல் போட்டி.? கொரோனவால் தள்ளி வைக்கப்படுமா.? பரபரப்பு தகவல்.!

2020ஆண்டுக்கான 13வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 24ம் தேதி வரை 9 நகரங்களில் நடைபெற இருக்கும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்து வருவதால், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் வருவதால் இந்தப் போட்டிக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்கள் மைதானத்தில் கூடுவார்கள். இதனால் கொரோனா பரவுவதை தடுக்க ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதுபோன்று கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவும் இதே கருத்தை கூறிருந்தார். மேலும் இந்தப் போட்டியை தள்ளி வைத்து மாற்று தேதியில் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
இந்த கொடூர கொரோனா விளைவு காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் ஆடியன்ஸ் இல்லாமல் போட்டி நடைபெறலாம் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் போட்டி தாள்ளிவைக்கப்படுமா? அல்லது பார்வையார்கள் இல்லாமல் நடைபெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.