துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான கால்பந்து வீரர் அட்சு..! இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மீட்பு..!

Default Image

துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான கால்பந்து வீரர் கிறிஷ்டியன் அட்சு, இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு (Christian Atsu) இடிபாடுகளுக்கிடையே உயிருடன் மீட்கப்பட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஆனது ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 5000 ஆக உயர்ந்துள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

Christian Atsu

மேலும் இந்த பயங்கர நிலநடுக்கத்தில் கானா குழுவை சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணாமல் போனார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்த நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக அட்சு இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவர் காணாமல் போனதிலிருந்து அவரது ரசிகர்கள் பலர் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

தற்பொழுது அவர் மீட்கப்பட்டதை அடுத்து அட்சுவுக்கு ஆதரவளிக்கும் விதமாக பல்வேறு செய்திகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் செல்சியா மற்றும் நியூகேஸில் அட்சு, இப்போது துருக்கிய அணியான ஹேடாய்ஸ்போருக்காக கால்பந்து விளையாடுகிறார். 31 வயதான அவர் கானாவினால் சர்வதேச அளவில் 65 முறை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்