இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்தது..!
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணியில் தொடக்க வீரர்களான மாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து 502 ரன்கள் எடுத்தது.
இதில் ரோகித் 176 ரன்னும் , மயங்க் அகர்வால் 215 ரன்னும் சேர்த்தனர். இதை தொடர்ந்து இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது.நாளை மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.