கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிற்குள்ளே இருப்பது மிக கடினமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறினார்.
கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த தளர்வு, விளையாட்டு துறைக்கு அளிக்கப்படாத நிலையில், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்-பவுலராக இருப்பவர், ரவிச்சந்திர அஸ்வின். பல கடினமான சூழலில் தனது அற்புத பந்துவீச்சில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். தற்பொழுது அவர் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி சத்குருவுடன் ஆன்லைன் இன்டர்வியூ ஒன்றில் ஒன்றில் தொகுப்பாளராக செயல்பட்டார் அப்பொழுது அவரிடம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார் அஸ்வின்.
மேலும் நிகழ்ச்சியின்போது அஸ்வின், வெளியில் சென்று போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் உள்ளது மிகவும் கடினமாக இருப்பதாகவும், போட்டிகளில் பங்கேற்று விளையாட மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…