AsianGames2023: பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்.! தமிழ்நாடு வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்.!

Published by
செந்தில்குமார்

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா பல வெற்றி பதங்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒலுவாகேமி முஜிதாத் 54.45 வினாடிகளில் இலக்கை அடைந்து முதல் இடம் வென்றார். சீனாவின் ஜியாடி 55.01 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இதனால், பஹ்ரைனின் முஜிதாத் தங்கப்பதக்கமும், சீனாவின் ஜியாடி வெள்ளிப்பதக்கமும், இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மறுபுறம், ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் யஷாஸ் பலாக்ஷா மற்றும் டி சந்தோஷ் குமார் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 50.68 வினாடிகளில் இலக்கைக் கடந்து அமெரிக்காவின் மெக்லாக்லின் உலக சாதனை படைத்தார். மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை விளையாடி விளையாட்டுகளில் இந்தியா 63 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில்  4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 156 தங்கம், 85 வெள்ளி, 43 வெண்கலம் என 284 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

6 hours ago
பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

7 hours ago
ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

8 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

8 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

9 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

9 hours ago