AsianGames2023: பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்.! தமிழ்நாடு வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்.!
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா பல வெற்றி பதங்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒலுவாகேமி முஜிதாத் 54.45 வினாடிகளில் இலக்கை அடைந்து முதல் இடம் வென்றார். சீனாவின் ஜியாடி 55.01 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
இதனால், பஹ்ரைனின் முஜிதாத் தங்கப்பதக்கமும், சீனாவின் ஜியாடி வெள்ளிப்பதக்கமும், இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மறுபுறம், ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் யஷாஸ் பலாக்ஷா மற்றும் டி சந்தோஷ் குமார் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 50.68 வினாடிகளில் இலக்கைக் கடந்து அமெரிக்காவின் மெக்லாக்லின் உலக சாதனை படைத்தார். மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை விளையாடி விளையாட்டுகளில் இந்தியா 63 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 156 தங்கம், 85 வெள்ளி, 43 வெண்கலம் என 284 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.