சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் இறுதி போட்டியில், இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் 7வது நாளாகத் தொடரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கத்தில் மேலும் ஒரு தங்கத்தை சேர்ந்துள்ளது.
இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் குழு ஸ்குவாஷ் பிரிவில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால் இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 10வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் அடுத்ததாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாட உள்ளனர்
தற்போது வரை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 36 பதக்கங்களை பெற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. சீனா 108 தங்கம், 66 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதேபோல, ஜப்பான் 28 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 28 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…