AsianGames2023: பாய்மரப்படகு போட்டியில் தமிழக வீரர் விஷ்னு சரவணன் வெண்கலம் வென்று அசத்தல்.!

Vishnu Saravanan

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்னு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்த பாய்மரப்படகு போட்டியில் 34 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கம் வென்ற சரவணன் தமிழகத்தின் வேலூரைச் சேந்தவர் ஆவார்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டில் பாய்மரப்படகுப் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்