Indianhockey
19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி 13 வது நாளாக நடைபெற்று வரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல பதக்கங்களை வென்று நாட்டைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று ஆடவர்களுக்கான ஹாக்கி இறுதிப்போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் முதல் காலிறுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது காலிறுதியில் மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைப் பெறச்செய்தார். பிறகு, மூன்றாவது காலிறுதியில் பெனால்டி கார்னர்களில் ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ் மற்றும் அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர்.
இதனால் இந்தியா மூன்று காலிறுதியில் முன்னிலை பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி பிரிவில் நடப்பு சாம்பியனான ஜப்பானைத் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. இதற்கிடையில், இந்தியா 1966, 1998 மற்றும் 2014 ஆகிய மூன்று பட்டங்களை வென்றுள்ளது. இதை தொடர்ந்து ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு எதிரான பிரிட்ஜ் இறுதிப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 94வது பதக்கம் ஆகும். இன்னும் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது. தற்போது வரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என 95 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…