AsianGames2023: ஆசிய விளையாட்டில் புதிய சாதனை.! டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலம் வென்றது இந்தியா.!
சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் தொடங்கி, இன்று 9 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இதில் காலை கோங்ஷு கேனல் விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பெண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளனர்.
அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஜோடி, கொரியாவின் சா சுயோங் மற்றும் பாக் சுக்யோங் ஜோடிக்கு எதிராக விளையாடினர். இதில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருந்தது. அதன்படி, முதல் ஆட்டத்தை 7-11 என்ற கணக்கில் வென்றது. ஆனால் இதன்பிறகு இந்தியா மூன்றாவது மற்றும் ஆறாவது போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் வெற்றி வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. மேலும், கொரியா அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டியது.
இதனால் இந்திய அணி டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இது 19 வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
இது ஆசிய விளையாட்டு வரலாற்றில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் மூன்றாவது பதக்கமாகும். முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல் மற்றும் மனிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றனர். அதே நேரத்தில் ஆடவர் அணியும் டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை விளையாடி விளையாட்டுகளில் மொத்தமாக 56 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என பதக்கங்களைப் பதிவு செய்து, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 139 தங்கம், 73 வெள்ளி, 39 வெண்கலம் என 251 பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.